/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்தூரில் காங்., நகர கூட்டம்
/
வெண்ணந்தூரில் காங்., நகர கூட்டம்
ADDED : பிப் 24, 2024 03:22 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் காங்., நகர கூட்டம், நேற்று நடந்தது. நகர தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் செல்லியம்மன் மணி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் காசி பெருமாள் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், நாமக்கல் லோக்சபா தொகுதியில் காங்., கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும். தமிழக காங்., புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது. மத்திய அரசு கொண்டு
வந்துள்ள மைக்ரோபால் மீடியம் என்டர்பிரைசஸ் சட்டத்தால் விசைத்தறி தொழில் பாதிக்கப்படும் நிலை உள்ளது, எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.