ADDED : மார் 24, 2026 05:38 AM
பள்ளிப்பாளையம் :தேர்தல் விதிகளால், பள்ளிப்பாளையம் பகுதியில் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி பிரதான தொழிலாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள், ஈரோடு ஜவுளி சந்தை வழியாக இந்தியா முழுதும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது, சட்டசபை தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், ஜவுளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆவணமின்றி, 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லும் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால், ஜவுளி விற்பனையாகும் பணத்தை கொண்டு வருதற்கே அச்சப்படுகின்றனர். இதனால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதால், விற்பனையும் குறைந்துள்ளது. விற்பனை பாதிப்பால் ஜவுளி உற்பத்தியும் சரிந்துள்ளது.
