/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழை சாரலில் நனைந்தபடி அருவியில் உற்சாக குளியல்
/
மழை சாரலில் நனைந்தபடி அருவியில் உற்சாக குளியல்
ADDED : ஜூலை 15, 2024 01:10 AM
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது.
இங்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஏராளமான சுற்றுலா பய ணிகள் குடும்பத்துடன் வந்து இங்குள்ள மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி ஆகியவைகளில் குளித்து விட்டு, அரப்பளீஸ்வரர், எட்டிக்கை யம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்நிலையில், கடந்த, 2 நாட்களாக கொல்லிமலையில் நல்ல மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் தண் ணீர் கொட்டுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு படையெ டுத்தனர். காலை, 11:00 மணி முதல், 5:00 மணி வரை சாரல் மழை பெய்தபடியே இருந்தது. சுற்றுலா பயணிகள் மழைச்சா ரலில் நனைந்தபடி, அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.