/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைக்க முயற்சி
/
அரசு புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைக்க முயற்சி
ADDED : மே 27, 2025 01:39 AM
சேந்தமங்கலம், அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச பட்டா கேட்டு, 200க்கும் மேற்பட்டோர் கொட்டகை அமைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, நேற்று முத்துக்காப்பட்டியை சேர்ந்த முத்து என்பவர், பெருமாபாளையத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதாகவும், அதை வாங்கி தருவதாக கூறி நரிக்குறவர் காலனியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோரை அங்கு அழைத்துச்சென்று கொட்டகை அமைக்க முயன்றார்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்துறையினர், அரசு நிலத்தில் அனுமதியின்றி தங்க கூடாது எனவும், கலெக்டரிடம் மனு கொடுத்து முறைப்படி பட்டா பெற்று வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
5 நாள் கிரிக்கெட் போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

