/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பண்ணைகளில் ஹெமட்டோடியா ஈயை கட்டுப்படுத்த வேண்டும்'
/
'பண்ணைகளில் ஹெமட்டோடியா ஈயை கட்டுப்படுத்த வேண்டும்'
'பண்ணைகளில் ஹெமட்டோடியா ஈயை கட்டுப்படுத்த வேண்டும்'
'பண்ணைகளில் ஹெமட்டோடியா ஈயை கட்டுப்படுத்த வேண்டும்'
ADDED : ஜன 17, 2024 11:47 AM
நாமக்கல்: 'மாட்டு பண்ணைகளில், ஹெமட்டோடியா ஈயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பண்ணையாளர்களுக்கு ஆய்வகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வானிலை ஆலோசனை மையம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வானிலையில் கடந்த வாரம் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 55.4 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை.  அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் தெளிவாகவும் மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம், 91.4 டிகிரிக்கும் மிகாமலும், இரவு வெப்பம், 68 டிகிரியாகவும் காணப்படும்.
மாட்டு பண்ணைகளில் பொதுவாக ஹெமட்டோடியா ஈ காணப்படும். இது கடிக்கும் ஈ வகையாகும். இந்த ஈக்கள் மாட்டின் வயிறு, கழுத்து மற்றும் கண் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கூட்டமாக காணப்படும். ஆண், பெண் ஈக்கள் மாடுகளை தொடர்ந்து கடித்து ரத்தத்தை உறிஞ்சக்கூடியது. மாடுகள் சாணம் போடும்போது அதில் முட்டையிடும். ஈக்களின் தொல்லையை கட்டுப்படுத்த, பண்ணையில் சாணத்தை அவ்வப்போது அகற்றி குப்பை கிடங்கில் போட வேண்டும். புளுமெத்திரின், சைபர்மெத்திரின் போன்ற மருந்துகளை மாட்டின் மீது தெளிக்கலாம் மேலும் வேப்ப எண்ணெயை தடவலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

