ADDED : அக் 07, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார், கிழக்கு தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன், 40; இவர், குப்புச்சிபாளையத்தில் உள்ள, 'ஹாலோ பிளாக்' தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த, 30ல் வேலைக்கு சென்ற கலைச்செல்வன், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இவரது மனைவி செல்வி, 40, உறவினர் வீடுகளில் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் காணாமல் போன கணவன் கலைச்செல்வனை கண்டுபிடித்து தருமாறு, ப.வேலுார் போலீசில் புகாரளித்தார். போலீசார் தேடி வருகின்றனர்.

