/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேக விழா
/
ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேக விழா
ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேக விழா
ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும் 7ல் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 02, 2025 02:08 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, மணலி ஜேடர்பாளையம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கருணாம்பிகை சமேத ஆதிநாக அருளீஸ்வரர் கோவிலில் வரும், 7ம்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
கடந்த 27ல், முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா தொடங்கியது. வரும் 6ம் தேதி காலை, 7:00 மணி முதல் இரவு வரை விநாயகர் வழிபாடு, பாலிகை ஊர்வலம், வாஸ்து சாந்தி, கும்பஅலங்காரம், முதல் கால யாக துவக்கம், நாடிசந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 7ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு மங்களஇசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி துவக்கம், 6:45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் நடைபெறும்.