sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி திருமணம் செய்தவர் கைது

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி திருமணம் செய்தவர் கைது

ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி திருமணம் செய்தவர் கைது

ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி திருமணம் செய்தவர் கைது


ADDED : ஜன 26, 2024 10:26 AM

Google News

ADDED : ஜன 26, 2024 10:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனூர்: ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக்கூறி, திருமணம் செய்து மோசடி செய்த வாலிபரை, மோகனுார் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் ராசிகுமாரிபாளையம் தெரு, முருகன் நகரை சேர்ந்தவர் அகல்யா, 27. எம்.பி.ஏ., பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் டவுன் ஏ.எஸ்.பேட்டை முல்லை நகரை சேர்ந்த ராஜா, 35, என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், ராஜாவும், அகல்யாவும் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வசித்து வந்தனர். அதேசமயம் திருமணத்துக்கு பின், அவர்கள் இருவரையும், ராஜா தாயார் சாந்தி, அவரது சகோதரி தமிழ்செல்வி, ராஜா மாமா கந்தசாமி ஆகியோர் சேர விடாமல் தடுத்து வந்தனர். திருமணத்துக்கு முன், இந்திய ஆட்சிப்பணியில் (ஐ.ஏ.எஸ்.,) இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் அந்தஸ்தில் இருப்பதாகவும், அதற்கு முன், பாரத் ஸ்டேட் வங்கி, ஹைதராபாத் மண்டலத்தில் ஜோனல் மேலாளராக இருந்தபோது மாதம், 1.80 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும், சென்னையில் உள்ள ராஜ்பவனில் மத்திய ஆட்சிப்பணியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக கலெக்டர், நோடல் ஆபீசர், பேங்க் மேலாளர் ஆகிய அடையாள அட்டைகளை, அகல்யாவின் பெற்றோரிடம் காண்பித்து, அவர்களை நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார். அதற்கு ராஜாவின் தாயார், சித்தி சகோதரி, மாமா கந்தசாமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். திருமணத்திற்கு பின், ராஜாவின் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், சந்தேகம் அடைந்த அகல்யா, ராஜாவின் மொபைல்போனை சோதனை செய்தார். அப்போது, அவர் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதாததும், வங்கியிலும் வேலை செய்யாததும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் அகல்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். உயிருக்கு பயந்த அகல்யா, மோகனுாரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இது தொடர்பாக மோகனுார் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலி ஆவணம் தயாரித்தல், நம்பிக்கை மோசடி செய்தல், ஏமாற்றுதல், அடித்து துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மோகனுாரில் பதுங்கி இருந்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us