/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனூர் காந்தமலை முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்
/
மோகனூர் காந்தமலை முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்
மோகனூர் காந்தமலை முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்
மோகனூர் காந்தமலை முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்
ADDED : ஜன 26, 2024 10:29 AM
மோகனூர்: மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்
திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மோகனுார் நகரில் உள்ள காந்த மலையில், குன்றின் மீது பாலசுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு தைப்பூச விழா கடந்த, 16ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்கியது. 17 கொடியேற்றம் நடந்தது. தினமும் திருவீதி உலா நடந்தது. 23 காலை சிறப்பு அபி ேஷகம், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. 24ல், குதிரை வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா வந்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவர் முருகன் அலங்கரிக்கப்பட்டு, தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின் ஏராளமான பக்தர்களுடன் சேர்ந்து நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் வடம் பிடித்து தேர் இழுத்தார். இன்று காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு சத்தாபரணம் நடைபெறும். நாளை விடையாற்றி உற்சவம், 28ம் மதியம் அன்னதானம், 29ம் தேதி காவடி ஊர்வலம் நடைபெறும்.
கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வசீராளன், ரமேஷ்பாபு, டாக்டர் குழந்தைவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நவலடி, டவுன் பஞ்., துணைத்தலைவர் சரணவன், நகர செயலர் செல்வவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோகனுார் ரோட்டரி கிளப் சார்பில் மோர், குடிநீர் வழங்கப்பட்டது.

