/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நமக்கு நாமே' திட்டம் ரூ.1.70 லட்சம் வழங்கல்
/
'நமக்கு நாமே' திட்டம் ரூ.1.70 லட்சம் வழங்கல்
ADDED : செப் 11, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு :திருச்செங்கோடு நகராட்சி, 21வது வார்டு கூட்டப்பள்ளி வாட்டர் டேங்க் ரோடு பகுதியில், 200 மீட்டர் நீளமுள்ள வடிகால் மற்றும் சாலை அமைக்க, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 5 லட்சத்து, 10,000 ரூபாய் மதிப்பீட்டில் பணி துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான பொதுமக்கள் பங்களிப்பு தொகை, ஒரு லட்சத்து, 70,000 ரூபாய்க்கான காசோலை, திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில்ல நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.