/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
/
அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
ADDED : செப் 19, 2025 01:36 AM
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் துாய்மையே சேவை என்ற தலைப்பின் கீழ், சிறப்பு முகாம் நடைபெற்றது.
முதல்வர் காளீஸ்வரி தலைமையில் நடந்த முகாம், 17ம் தேதி முதல் அக்., 2 வரை நடைபெற உள்ளது.
சிறப்பு முகாமுக்கான உறுதிமொழியை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் ஏற்றுக்கொண்டனர். முதல் கட்டமாக, 25 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் நேற்று அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு, தாசில்தார் அலுவலகம், பஸ் நிறுத்தம், டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி துாய்மை பணியை மேற்கொண்டனர்.
துாய்மை பணி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். மேலும் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள நீர்நிலைகள், பஸ் ஸ்டாண்ட், பயணிகள் காத்திருப்பு மையம் ஆகிய இடங்களிலும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, நாட்டு நல பணி அலுவலரும், கல்லுாரி முதல்வருமான காளீஸ்வரி தெரிவித்தார்.