/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பலப்பட்டறை மாரியம்மன் கோவிலுக்கு புதிய துாக்கு தேர்
/
பலப்பட்டறை மாரியம்மன் கோவிலுக்கு புதிய துாக்கு தேர்
பலப்பட்டறை மாரியம்மன் கோவிலுக்கு புதிய துாக்கு தேர்
பலப்பட்டறை மாரியம்மன் கோவிலுக்கு புதிய துாக்கு தேர்
ADDED : மே 24, 2025 01:26 AM
நாமக்கல், நாமக்கல்லில்
பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு
ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.
அதன்படி, மே, 11ல் சக்தி அழைப்பு, காப்பு கட்டுதல், 12ல் பூச்சாட்டு
விழா, 18ல் மறுகாப்பு, நாளை வடிசோறு மற்றும் மாவிளக்கு பூஜை
நடக்கிறது.
நாளை மறுநாள், அபிஷேகம், ஆராதனை, அம்மன் அலங்காரம், ரத
உற்சவம், அலகுகுத்து, பூவோடு எடுத்தல், அன்று இரவு மாவிளக்கு
எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில்
புதிய துாக்கு தேர் வடிவமைக்கப்பட்டு, நேற்று கோவில் வளாகத்தில்
வெள்ளோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.