sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 10, 2024 11:06 AM

Google News

ADDED : ஜன 10, 2024 11:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் நிறுத்தம் வாபஸ்

மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்ட அறிக்கை:

குமாரபாளையம், பள்ளிப்பாளையம்,

சமயசங்கிலி துணைமின் நிலையங்களில், நாளை (ஜன., 11) மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக, மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக மேற்படி நாளில் பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.24,000க்கு தேங்காய் ஏலம்

ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 24,000க்கு வர்த்தகம் நடந்தது.

கடந்த வாரம், 3,150 தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சம் கிலோ, 25 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 18.31 ரூபாய்க்கும், சராசரியாக, 21.90 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 21,000க்கு வர்த்தகம் நடந்தது.

அதேபோல், நேற்று நடந்த ஏலத்தில், 3,736 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ, 23.29 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 19 ரூபாய்க்கும், சராசரியாக, 22.99 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 24,000க்கு வர்த்தகம் நடந்தது.

பருத்தி விவசாயிகள் சாலை மறியல்நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், 1,000க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆர்.சி.எச்., கொட்டு மட்ட ரகம், சுரபி, டி.சி.எச்., என்ற அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு, பருத்தி ஏலத்துக்கு எடுக்கப்பட்டது.

நாமக்கல்லில், நேற்று காலை முதல் மழை பெய்து வந்ததால், விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகள், மழையில் நனைந்தன. இதனால் ஒரு மூட்டை பருத்திக்கு, 3 கிலோ வரை குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரவு, 7:00 மணிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன், திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், நாமக்கல் போலீசார், கூட்டுறவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விட்டுவிட்டு பெய்த மழைஇயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலுார் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், நாமக்கல், மோகனுார், புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், லேசான மழை பெய்தது. இந்த மழை விட்டுவிட்டு பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லுாரி சென்ற மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பலரும், மழையில் நனைந்தபடியும், குடைபிடித்துக்கொண்டும் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும், மழைக்கோட் அணிந்தும் சென்றனர். அதிகாலை துவங்கிய மழை, மதியம், 1:00 மணி வரை பெய்தது. இந்த மழை காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியது. அதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ரூ.7 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனைநாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் நேற்று, மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், மிக குறைந்தளவில் விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டுவந்தனர்.

விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 12,149 ரூபாய்க்கும், அதிகபட்சம், 11,875 ரூபாய்க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம், 10,330 ரூபாய்க்கும், அதிகபட்சம், 10,280 ரூபாய்க்கும் விற்பனையானது. விரலி, 97, உருண்டை, 33, என, 130 மூட்டை மஞ்சள், 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

காலி குடங்களுடன் யூனியன் ஆபீஸ் முற்றுகை

சேந்தமங்கலம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன், நவணி பஞ்., பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஜேடர்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், லக்கியம்பட்டி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணியின் போது, குடிநீர் குழாய் உடைந்து சேதமானதால், தோட்டக்கூர்பட்டி, புதுச்சத்திரம், வெள்ளாளப்பட்டி, ரெட்டிபுதுார், அய்யம்புதுார், லக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வழங்குவது தடைப்பட்டது. இதுகுறித்து, பஞ்., தலைவர், பி.டி.ஓ., ஆகியோரிடம் புகார் அளித்தும், குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், புதுச்சத்திரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலக நுழைவாயில் முன் தரையில் அமர்ந்து காலிக்குடங்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் ஏ.பி.டி.ஓ., சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி, 'விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததையடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

பூ வியாபாரி அடித்து கொலை

தறித்தொழிலாளிக்கு வலை

பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 56. இவர், சைக்கிளில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த, 6ல் கீழ்காலனி பகுதியில் தலையில் கல்லை போட்டு ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பள்ளிப்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தினர். அதில், அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஆறுமுகத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. அப்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், இந்த கொலையில் தறித்தொழிலாளி ஒருவர் ஈடுபட்டுள்ளார் என, தெரியவந்துள்ளது. போலீசார் தேடுவதை அறிந்த தறித்தொழிலாளி தலைமறைவு ஆகிவிட்டார். அவரை பிடிக்க, கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இன்று மின் நுகர்வோர்

குறைதீர் கூட்டம்

சங்ககிரி கோட்ட செயற் பொறியாளர் உமாராணி வெளியிட்ட அறிக்கை: தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம்,

சங்ககிரி கோட்டத்தில், மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று காலை, 11:00 மணி முதல், 1:00 மணி வரை, செயற்பொறியாளர், மின்வாரிய அலுவலகம், சங்ககிரி அலுவலகத்தில் நடக்கிறது. சங்ககிரி கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பி.எட்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர்

அருணாசலம் தலைமை வகித்தார். இதே கல்லுாரியில் முன்னாள் முதல்வரும், தஞ்சை, குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வருமான ஜான் பீட்டர்,

அண்ணாமலை பல்கலை கடல்வாழ் உயிரினத்துறை தலைவர் சண்முகம் ஆகியோர், 277 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பாராட்டினர்.

தொடர்ந்து, ஜான் பீட்டர் பேசியதாவது: குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லுாரி, 1955ல் துவக்கப்பட்டு, 68வது ஆண்டில் வெற்றிநடை போட்டு வருகிறது. ஆசிரியர் பணி உன்னத பணி. இது தொழிலா? தொண்டா? என்றால் தெரசா சொன்னது போல் தொண்டு தான். எதிர்கால இந்தியாவை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் நதிபோல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், நீங்களும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். காலத்திற்கேற்ப உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தலில் பதற்றமான ஓட்டுச்சாவடி

பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஆயத்தம்

லோக்சபா தேர்தல், 2024 முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், ஆலோசனை கூட்டம், ஓட்டு எண்ணும் மையம் மற்றும் ஓட்டுச்

சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு, ஓட்டுச்சாவடி மையங்களில் தேவையான வசதிகள் குறித்து ஆய்வு போன்ற பணிகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா, நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, ராமாபுரம்புதுாரில் உள்ள நடுநிலைப்பள்ளி மற்றும் மோகனுார் ஒன்றியம், ஒருவந்துார் பஞ்., தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார்.

அப்போது, வாக்காளர்கள் பாதுகாப்பான முறையில், ஓட்டுப்போடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், ஆர்.டி.ஓ., சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

அலுவலக உதவியாளர்

பணிக்கு நேர்காணல்

மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இரவு காவலர், அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல், நேற்று நடந்தது.

மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு இரவு காவலர், 3 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதில், இரவு காவலர் பணிக்கு, 53 பேர், அலுவலக உதவியாளர் பணிக்கு, 144 பேர் என, 197 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம், நேற்று, நாளை, நாளை மறுநாள் என நான்கு நாட்கள் நேர்காணல் நடக்கிறது.

வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி தலைமை வகித்தார். சேர்மன் அலுமேலுவிஜயன், துணை சேர்மன் வனிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், கலந்துகொண்ட பெண்கள், அலுவலகம் முன் சைக்கிள் ஓட்டி காண்பித்தனர்.

டூவீலர் திருடியவர் கைது

2 வாகனங்கள் பறிமுதல்

குமாரபாளையத்தில் டூவீலர் திருடியவரை கைது செய்து, 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையத்தில், கடந்த, 21, 26ல், பவானி சுரேஷ், 41, குமாரபாளையம் சூர்யநாராயணன், 62, ஆகிய இருவரின் டூவீலர்கள் திருடு போயின. இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்

பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மாலை, 4:00 மணியளவில், குமாரபாளையம் காவேரி நகர், சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.,க்கள் சந்தியா, தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதிவெண் இல்லாமல் டூவீலர் ஓட்டிவந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், குமாரபாளையத்தில் திருடப்பட்ட வாகனம் என்பதும், அவர் ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த மணி, 55, என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

பெருமாள் கோவிலில்

இன்று ஹனுமன் ஜெயந்தி

மோகனுார் காவிரி கரையோரத்தில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி பத்மாவதி சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆண்டுதோறும், ஹனுமன் ஜெயந்தி உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, இன்று (ஜன., 10) நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த, 4 முதல், நேற்று வரை, செந்துாரகாப்பு, புஷ்பங்கி, வெண்ணெய் காப்பு, காய்கறி கனி, சர்வாபரணம், சந்தனகாப்பு ஆகிய அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, இன்று ஹனுமன் ஜெயந்தி உற்சவ விழாவை முன்னிட்டு, 9:00 மணிக்கு, அபிஷேக, ஆராதனை நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்

களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தற்காலிக டிரைவர்களால்

அரசு பஸ்கள் விபத்து

தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடந்த நிலையில் திருநெல்வேலி கோட்டத்தில் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 96 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில தடங்களில் பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டன.

வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் கார் மீது மோதியது. அந்த காரை ஓட்டியவர் பஸ் டிப்போவில் கொண்டு வந்து நிறுத்தினார். தங்களுக்கும் விபத்துக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் கூறினர்.

தற்காலிக டிரைவரே, அந்த கார் உரிமையாளரிடம் சமாதானம் பேசி தானே பழுதை சரி செய்து தருவதாக கூட்டிச் சென்றார். இதே போல மற்றொரு இடத்தில் தற்காலிக டிரைவர் ஓட்டியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்து லேசான சேதமுற்றது.

ரூ.2 கோடிக்கு

மாடுகள் வர்த்தகம்

சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தையில் நேற்று மாட்டுச்சந்தை கூடியது. இதில், பசு, எருமை, கறவை மாடுகள், இறைச்சி மாடுகள், கன்று குட்டிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

கடந்த வாரம், 20,000 ரூபாய்க்கு விற்ற இறைச்சி மாடுகள், நேற்று, 21,000 ரூபாய்க்கும்; பசுமாடுகள், 25,000 ரூபாய் முதல், 37,000 ரூபாய்க்கும்; 35,000 ரூபாய்க்கு விற்ற எருமை மாடு, 38,000 ரூபாய்க்கும்; 6,000 ரூபாய்க்கு விற்ற கன்று குட்டிகள், 7,000 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தி.கோடு செங்குந்தர் இன்ஜி.,

கல்லுாரி பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லுாரி மற்றும் செங்குந்தர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா நடந்தது. செங்குந்தர் கல்லுாரிகள் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் பாலதண்டபாணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சதீஸ்குமார், கல்வி ஆண்டிற்கான அறிக்கை வாசித்தார். பொருளாளர் தனசேகரன், வேலைவாய்ப்பு இயக்குனர் அரவிந்த்திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை அண்ணா பல்கலை முன்னாள் பதிவாளர் ரவிக்குமார், நான்கு பேருக்கு தங்க பதக்கங்களையும், 639 மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி பேசினார். கல்லுாரி முதல்வர்கள் சுரேந்திரகுமார், நீலாவதி மற்றும் துறைத்தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us