sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் காரில் உலா பொது மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

/

2 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் காரில் உலா பொது மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

2 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் காரில் உலா பொது மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

2 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் காரில் உலா பொது மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை


ADDED : செப் 10, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் ப.வேலுார் பகுதியில் பைனான்சியர் வீடு உள்ளிட்ட இரண்டு வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் காரில் உலா வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

ப.வேலுார், தெற்கு நல்லியம்பாளையம், சண்முகா நகரை சேர்ந்தவர் சக்திவேல், 42; பைனான்ஸ் அதிபர். இவரது வீட்டில், நேற்று முன்தினம் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த, 35 பவுன் நகை, 70,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். அப்போது, 'மாருதி சுவிப்ட்' காரில் வந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது. கார் நம்பரை வைத்து விசாரித்தபோது போலி நம்பர் பிளேட் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதேபோல், பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தமிழரசி, 58; இவரது வீட்டில் மர்ம நபர் புகுந்து, 2 பவுன் நகையை திருடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டர் தேவி, பொதுமக்களுக்கு, 'வாட்ஸாப்' மூலம் தகவல் அளித்துள்ளார்.

அதில், 'ப.வேலுார் பகுதியை சேர்ந்த, இரண்டு வீடுகளில் நகை, பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்கள், வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 'மாருதி சுவிப்ட்' காரில் சுற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. வண்டி எண், டி.என். 13 எக்ஸ் 2038. இந்த காரை கண்டால், பொதுமக்கள் உடனடியாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கவும். மேலும், 9842788031, 9498101051 என்ற தொலைபேசி எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளவும்' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us