/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றில் தொடர் தண்ணீர் திருட்டு அதிகாரிகளின் ஆய்வு அவசியம்
/
ஆற்றில் தொடர் தண்ணீர் திருட்டு அதிகாரிகளின் ஆய்வு அவசியம்
ஆற்றில் தொடர் தண்ணீர் திருட்டு அதிகாரிகளின் ஆய்வு அவசியம்
ஆற்றில் தொடர் தண்ணீர் திருட்டு அதிகாரிகளின் ஆய்வு அவசியம்
ADDED : ஜன 26, 2024 10:29 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில், காவிரி ஆற்றுப்பகுதியில் மோட்டார் வைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பது தொடர் கதையாக உள்ளது.
காவிரி ஆற்றில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வரத்து அதிகளவு வந்தது. கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. தற்போது குடிநீருக்கும் மட்டும் ஆற்றில் தண்ணீர் வருகிறது. ஓரிரு மாதங்களில் கோடைக்காலம் துவக்கி விடும். அப்போது மக்கள் ஆற்று தண்ணீரை தான் முழுமையாக நம்பி இருப்பர்.
பள்ளிப்பாளையம் ஆற்றுப்பகுதியில் ஆவத்திபாளையம், சமயசங்கிலி, அக்ரஹாரம், வசந்தநகர், உள்ளிட்ட பல இடங்களில் விதிமுறைகளை மீறி மோட்டார் வைத்து, சாய ஆலைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களும் தண்ணீர் எடுக்கின்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்லும் போது, பாதிப்பு ஏற்படாது. தற்போது குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
கோடைக்காலம் விரைவில் துவங்கவுள்ளதால், குடிநீர் பற்றாக்
குறையை போக்க, சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறை மீறி ஆற்றில் தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றில் திருட்டுத்
தனமாக தண்ணீர் எடுக்கப்படுவதை கண்டித்து, நேற்று முன்தினம் ஆவத்திபாளையம் பகுதியில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

