/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பச்சுடையாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
பச்சுடையாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜன 10, 2024 11:17 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் யூனியன், பச்சுடையாம்பட்டி பஞ்சாயத்தில், கடந்த, 25 ஆண்டுக்கு முன் கான்கிரீட் சாலை போடப்பட்டது. தற்போது, அந்த சாலை சேதமானதால், புதிய கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதன்படி, 15வது மானியக்குழு திட்டம் சார்பில், கடந்தாண்டு, 9.59 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் சாக்கடை வசதி அமைக்கும் பணி துவங்கியது.
அப்போது, கான்கிரீட் சாலை அமைக்கும் பகுதிகளில், வருவாய்த்துறை சார்பில் நில அளவீடு செய்தனர். அதில், அப்பகுதி மக்கள் சிலர் சாலையோரத்தில் திண்ணை அமைத்தும், படிக்கட்டுகள் அமைத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டுபிடித்தனர். இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில், எஸ்.ஐ., பிரியா, பஞ்., தலைவர் திலகம், ஆர்.ஐ., பிரகாஷ், வி.ஏ.ஓ., சத்தியசீலன், பி.டி.ஓ.,  மற்றும் போலீசார் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

