/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செங்குந்தர் பார்மசி கல்லுாரியில் கருத்தரங்கு
/
செங்குந்தர் பார்மசி கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : ஜூன் 13, 2025 01:37 AM
திருச்செங்கோடு. திருச்செங்கோடு, செங்குந்தர் மருந்தியல் கல்லுாரியில் மருந்து வேதியியல் துறை சார்பில், மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் வளர்ந்து வரும் கருவியான செயற்கை நுண்ணறிவின் பங்கு எனும் தலைப்பில், மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு துவக்க விழா நடந்தது.
செங்குந்தர் கல்வி குழுமத்தின் தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமை வகித்தார். முதல்வர் சுரேந்திரகுமார் வரவேற்றார். தாளாளர் பாலதண்டபாணி முன்னிலை வகித்தார்.
நிஸ்வா பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சிக்கான துணைத் தலைவர், ஓமன் சுல்தானகத்தின் மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறையின் துணை பேராசிரியர் ஷியாம் சுந்தர் பேசுகையில்,' நோயாளி பராமரிப்பில் பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றல் மற்றும் மின்னணு சுகாதார பதிவு, டெலிபார்மசி முக்கியங்கள், மருந்தாளுனர்கள் நோயாளியின் வரலாறுகளை கண்காணிக்கவும், சிகிச்சைகளை பரிந்துரைக்கவும், மருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். மாணவர்கள் டிஜிட்டல் சுகாதார கருவிகளுடன் நேரடி அனுபவத்தை பெற்று, நோயாளியின் விளைவுகளையும் செயல்திறனையும் மேம்படுத்தி ஒருங்கிணைப்பது முக்கியம்' என்றார்.
பொருளாளர் தனசேகரன், கல்லுாரி தலைமை நிர்வாக இயக்குனர் அரவிந் திருநாவுக்கரசு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பார்மசி கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.