/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிதிலமடைந்த அங்கன்வாடி மையத்தால் அவதி
/
சிதிலமடைந்த அங்கன்வாடி மையத்தால் அவதி
ADDED : மே 28, 2025 01:25 AM
எலச்சிபாளையம் :கொட்டாம்பட்டியில், சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எலச்சிபாளையம் யூனியன், அக்கலாம்பட்டி பஞ்., கொட்டாம்பட்டி கிராமத்தில், 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
தற்சமயம், இக்கட்டடம் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசலடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் மழைநீர் உள்ளே தேங்கி நிற்கிறது. ஒருநாள் இடிந்து விழக்கூடும் என்பதால், குழந்தைகளை அங்குள்ள இ-சேவை மைய கட்டடத்தில் தங்க வைத்துள்ளனர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடத்தில், பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குழந்தைகளின் நலன்கருதி சிதிலமடைந்து காணப்படும் கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.

