/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ராசிபுரத்தில் துவக்கம்
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ராசிபுரத்தில் துவக்கம்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ராசிபுரத்தில் துவக்கம்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ராசிபுரத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 04, 2025 01:48 AM
ராசிபுரம், 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் பெயரில், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் ராசிபுரம் சட்டசபை அலுவலகத்தில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், தன் மொபைல் ஆன்லைன் ஆப் மூலம் உறுப்பினர் பதிவை புதுப்பித்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் உள்ள, ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாக சென்று தி.மு.க.,வை சேர்ந்த தகவல் தொழில் அணி மற்றும் இளைஞர் அணி, சார்பு அணியை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைய வேண்டிய அவசியம் என்ன மற்றும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இழைக்கக்கூடிய அநீதிகளை எடுத்துரைத்து, நாம் ஏன் ஓரணியில் இணைய வேண்டும் என்ற கருத்தை முன் வைக்க உள்ளோம்.
ஓரணியில் தமிழ்நாடு என்பது, தி.மு.க.,வுக்கு உறுப்பினர்களை சேர்ப்பது மட்டுமல்ல; பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிற தமிழர்களுடைய உரிமைகளை பாதுகாக்க, மண், மொழி, மானம், பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாக்க முதல்வர் முன்னெடுத்துள்ளார்.
திருப்புவனம் சம்பவம் வருத்தமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் முதல்வர் பேசி உள்ளார். அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். இதில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இவ்வாறு கூறினார்.