/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., கூட்டணியில் வி.சி., இணைய வேண்டும்:பா.ஜ., துணைத்தலைவர்
/
பா.ஜ., கூட்டணியில் வி.சி., இணைய வேண்டும்:பா.ஜ., துணைத்தலைவர்
பா.ஜ., கூட்டணியில் வி.சி., இணைய வேண்டும்:பா.ஜ., துணைத்தலைவர்
பா.ஜ., கூட்டணியில் வி.சி., இணைய வேண்டும்:பா.ஜ., துணைத்தலைவர்
ADDED : ஜூன் 27, 2025 01:37 AM
நாமக்கல், ''பா.ஜ.வுடன், திருமாவளவன் கூட்டணி சேர வேண்டும்,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கூறினார்.
இந்தியாவில், 1975ம் ஆண்டு எமர்ஜென்சி என்ற அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன், -50ம் ஆண்டு இருண்ட நினைவுகள் என்ற தலைப்பில், நாமக்கல் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பலரும் விமர்சனம் செய்கின்றனர். மாநாட்டில் காட்டப்பட்ட பழைய வீடியோவை வைத்து, கட்சியினர் அரசியல் செய்கின்றனர். கையில் அரசியல் சாசன சட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டு, பா.ஜ., அரசியல் சாசனத்திற்கு எதிராக நடப்பதாக ராகுல் சொல்லிக் கொண்டுள்ளார்.
ஆனால், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, 1975ம் ஆண்டு அரசியல் சாசனத்தை முழுமையாக முடக்க வைத்துவிட்டு, எமர்ஜென்சி என்ற அவசரநிலை பிரகடனத்தை ஏற்படுத்தினார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தினர். அந்த கட்சியுடன், தி.மு.க., கூட்டணியை வைத்துள்ளது.
கடவுள் இல்லை என கூறுபவர்கள், கடவுள் பெயரை, 'மிஸ் யூஸ்' செய்கிறார்கள் என எப்படி கூறுகின்றனர். அப்படியெனில் கடவுள் இருக்கிறார் என அர்த்தம். எனவே, கடவுள் உள்ளாரா இல்லையா என்பதை முதல்வர் ஸ்டாலின், தன் மனைவியிடம் கேட்டு தெளிவு செய்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.,வை அழிக்கும் அளவிற்கு பா.ஜ.,விற்கு சக்தி உள்ளது என, திருமாவளவன் கூறுகிறார் என்றால் பா.ஜ., வலிமையான கட்சி என பொருள். எனவே வலிமையான கட்சியான பா.ஜ.,வுடன், திருமாவளவன் கூட்டணி சேர வேண்டும். திருமாவளவன் நெற்றியில் இருந்து திருநீரை அழித்ததை அரசியலாக்க வேண்டாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம்.
இவ்வாறு கூறினார்.
கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் உடனிருந்தார்.