/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி; மாணவர்கள் உற்சாகம்
/
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி; மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஜன 26, 2024 10:27 AM
நாமக்கல்: நாமக்கல், அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பேரணியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமா பேசுகையில்'' தேர்தல் ஆணையம், 1950 ஆண்டு ஜனவரி, 25ல், அமைக்கப்பட்டது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கட்டாயம் வாக்காளர் அட்டை பெற்று, தேர்தல் அன்று தங்களது ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் அட்டை பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.
நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் தலைமையில் இளைஞர்கள், அதிகாரிகள், டிரைவர்கள் உள்ளிட்டோர் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, அங்கு வைத்திருந்த செல்பி பூத்தில் பொதுமக்களுடன் கலெக்டர் உமா போட்டோ எடுத்துக்கொண்டார். கட்டுரை, வினாடி வினா, சுவரொட்டி வரைதல், பாடல், கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆர்.டி.ஓ., சரவணன், சி.இ.ஓ., மகேஸ்வரி, தேர்தல் தாசில்தார் திருமுருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்
வலர்கள் கலந்து கொண்டனர்.

