ADDED : ஜூன் 21, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், உலக யோகா தினத்தை முன்னிட்டு, நேற்று பள்ளிப்பாளையம் அறிவு திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், பள்ளிப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, மனவளக்கலை யோகா பயிற்சி அளிக்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், யோகா ஆசிரியர்கள், மாணவிகளுக்கு சூரிய நமஸ்காரம், கை, கால் பயிற்சி, மூச்சு பயிற்சி கற்று கொடுத்தனர். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக, மனவளக்கலை யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள், பலன்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

