/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அசல் சான்றிதழை பெற்று தரக்கோரி கலெக்டர் ஆபீசில் வாலிபர் தர்ணா
/
அசல் சான்றிதழை பெற்று தரக்கோரி கலெக்டர் ஆபீசில் வாலிபர் தர்ணா
அசல் சான்றிதழை பெற்று தரக்கோரி கலெக்டர் ஆபீசில் வாலிபர் தர்ணா
அசல் சான்றிதழை பெற்று தரக்கோரி கலெக்டர் ஆபீசில் வாலிபர் தர்ணா
ADDED : மே 27, 2025 01:43 AM
நாமக்கல், ராசிபுரம் அடுத்த ஆர்.கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 37; இவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:
ராசிபுரம் அடுத்த வெண்ணந்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில், 2017-19ல், பி.எட்., படித்தேன். அதற்கான கல்வி கட்டணமாக, 80,000 ரூபாய் செலுத்தினேன். அதிலிருந்து, 40,000 ரூபாயை, கல்லுாரி முதல்வர் எடுத்துச்சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கல்லுாரி படிப்பு முடிந்த நிலையில், என் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பி.எட்., சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை தர மறுக்கின்றனர். மேலும், 80,000 ரூபாய் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். ஐந்தாண்டாக போராடி
வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்தால், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து, வாலிபர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.

