/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்ணிடம் நகை பறிப்பு குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை
/
பெண்ணிடம் நகை பறிப்பு குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 13, 2024 08:29 AM
கூடலுார், : கூடலுார் அருகே பெண்ணிடம் நகை பறித்த நபருக்கு, மூன்று ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது.
கூடலுார், ஸ்ரீமதுரை அருகே உள்ள போலீஸ் மட்டம் பகுதியில் யசோதா என்பவர், கடந்த ஆண்டு, அக்., 8ம் தேதி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் தாலி செயினை பறித்து சென்றார்.
கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை போய் கொண்டு, கூடலுார் காசிம் வயலை சேர்ந்த சனவுல்லா, 44, என்பவரை கைது செய்து, நகையை மீட்டனர். இது தொடர்பான வழக்கு, கூடலுார் மாஜிஸ்திரேட்கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சசின்குமார், குற்றவாளி சனவுல்லாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீல் ஜோதிமணி, போலீஸ் தரப்பில் ஆஜரானார்.