/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லுாரி காலம் துவங்கும் முன் பைக் விபத்தில் பலியான மாணவர்
/
கல்லுாரி காலம் துவங்கும் முன் பைக் விபத்தில் பலியான மாணவர்
கல்லுாரி காலம் துவங்கும் முன் பைக் விபத்தில் பலியான மாணவர்
கல்லுாரி காலம் துவங்கும் முன் பைக் விபத்தில் பலியான மாணவர்
ADDED : ஜூன் 03, 2024 12:43 AM

குன்னுார்;குன்னுார் -- ஊட்டி சாலை அருவங்காடு அருகே, இடது புறத்தில் 'ஓவர் டேக்' செய்த பைக், கார் மீது மோதியதில் மாணவர் பரிதாபமாக பலியானார்.
குன்னுார் அருகே அருவங்காடு ஒசட்டி பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது இரண்டாவது மகன் தர்னேஷ்,17. நேற்று மதியம் இவர் தனது நண்பர் நித்திஷ் என்பவருடன் பைக்கில் பின்புறம் அமர்ந்து பாய்ஸ் கம்பெனியிலிருந்து அருவங்காடு பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது கோபாலபுரம் பகுதியில், ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த காரின், இடது புறமாக பைக்கில் ஓவர் டெக் செய்துள்ளனர்.
அதில், எதிர்பாராதவிதமாக காரின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த தர்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருவங்காடு மருத்துவமனையில் அனுமதித்து, குன்னூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெலிங்டன் கே.வி., பள்ளியில் பிளஸ்-2 முடித்த தர்னேஷ் கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் விண்ணப்பித்து சேர்ந்தார். 'கல்லுாரி காலம்' துவங்கும் முன் பைக் விபத்தில் பலியான சம்பவம் இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நித்தீஷ் லேசான காயங்களுடன் தப்பினார்.