/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய அறிவுரை; டிச., 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய அறிவுரை; டிச., 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய அறிவுரை; டிச., 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய அறிவுரை; டிச., 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 11, 2024 10:32 PM
ஊட்டி : குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ய, டிச., 31ம் தேதி வரை, கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பிறப்பு சான்றிதழ், குழந்தைகள் பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவர் லைசென்ஸ், பாஸ்போர்ட், விசா உரிமம், அயல் நாட்டில் குடியுரிமை பெற முக்கிய ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயர் இன்றி பதிவு செய்யப்பட்டு இருப்பின், குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து மூலம், உறுதி மொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து, எவ்வித கட்டணம் இல்லாமல் பெயர் பதிவு செய்யலாம்.
12 மாதங்களுக்குப் பின், 15 ஆண்டுகளுக்குள், தாமத கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தி பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய முடியாது.
இந்திய தலைமை பிறப்பு, இருப்பு பதிவாளரின் அறிவுரைப்படி கடந்த, 2000ம் ஆண்டு, ஜன., 1ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், அதற்கு பிறகு, 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற, நடப்பாண்டு டிச., 31ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, வெலிங்டன் பாளைய வாரியம், கார்டைட் தொழிற்சாலை அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தார், பேரூராட்சி அலுவலரிடம் கல்வி சான்று ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம்.
'இந்த காலஅவகாசம் நீடிப்பு இவரும் காலங்களில் வழங்க முடியாது,' என, தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, பிறப்பு சான்றிதழ் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.