/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு: பங்கேற்ற 125 பேருக்கு சான்றிதழ்
/
குன்னுாரில் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு: பங்கேற்ற 125 பேருக்கு சான்றிதழ்
குன்னுாரில் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு: பங்கேற்ற 125 பேருக்கு சான்றிதழ்
குன்னுாரில் ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு: பங்கேற்ற 125 பேருக்கு சான்றிதழ்
ADDED : ஜூன் 10, 2024 12:33 AM

குன்னுார்:குன்னுாரில் நடந்த ஹாக்கி பயிற்சி முகாமில் பங்கேற்ற, 125 பேருக்கு சான்றிதழ்கள். பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'ஹாக்கி யூனிட் ஆப் நீலகிரி' சார்பில் மாவட்ட அளவிலான கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம், குன்னுார் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாத காலம் நடந்தது. 125 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அதில், ஹாக்கி போட்டியின் நுணுக்கங்கள் குறித்து கேலோ இந்தியா பயிற்சியாளர் சிஜூ மோன், தேசிய ஹாக்கிய நடுவர் பிரசாந்த் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி பெற்று சிறந்து விளங்கிய 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற அனுப்பப் படுகின்றனர்.
இதன் நிறைவு விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, உபதலை ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி ஆகியோர் மேற்பார்வையில், குன்னுார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்து கணேசன், இந்திய ஹாக்கி ஆடவரணி காணொளி பகுப்பாய்வாளர் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்று, மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் மற்றும் சீருடைகள் வழங்கினர்.
அனைவருக்கும், 'ஹாக்கி யூனிட் ஆப்' நீலகிரி அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.