/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்
/
தேயிலை தோட்டத்தில் கரடி தொழிலாளர்கள் அச்சம்
ADDED : ஜூன் 10, 2024 12:31 AM
குன்னுார்:குன்னுார் தேயிலை தோட்ட சாலையில் ஹாயாக உலா சென்ற கரடியால் தொழிலாளர் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் காட்டேரி அருகே, 10 நம்பர் டான்டீ குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலேயே கரடி உலா வந்தது.
அப்போது கரடி தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதியில் ஹாயாக நடந்து சென்றதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
எனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்