/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய பாலங்களில் வாகன போக்குவரத்து துவக்கம்
/
புதிய பாலங்களில் வாகன போக்குவரத்து துவக்கம்
ADDED : ஜூன் 11, 2024 01:26 AM

கூடலுார்;முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கார்குடி, கல்லல்லா பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலங்களில் வாகன போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கார்குடி, கல்லல்லா பகுதியில், சேதமடைந்த பாலங்களை அகற்றி, புதிய பாலம் அமைக்க, 3.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
பணியின் போது வாகன போக்குவரத்து தடையின்றி நடக்க, அப்பகுதியில் தற்காலிக பாலங்கள் அமைத்தனர்.
தொடர்ந்து, புதிய பாலம் கட்டும்பணி துவங்கப்பட்டது. மழையின் போது தற்காலிக பாலத்தில் வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், புதிய பாலங்கள் கட்டும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தது. தற்போது, புதிய பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.