/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழையால் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு
/
மழையால் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 16, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஆகாஷ பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுாரில் தொடரும் மழையால் சாலைகளில் அவ்வப்போது மரங்கள் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடுவட்டம் ஆகாஷ பாலம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு மண் சரிவு ஏற்பட்டது. அப்பகுதியை சிறிய வாகனங்கள் கடந்து சென்றாலும், பஸ் மற்றும் கனரகவாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் மண்ணை அகற்றி, 4:45 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.