/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகாலிங்கேஸ்வரர் கோவில் விழா ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறப்பு
/
மகாலிங்கேஸ்வரர் கோவில் விழா ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறப்பு
மகாலிங்கேஸ்வரர் கோவில் விழா ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறப்பு
மகாலிங்கேஸ்வரர் கோவில் விழா ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறப்பு
ADDED : ஜூன் 04, 2024 12:17 AM

குன்னுார்;குன்னுாரில் ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் சுயம்பு மகாலிங்கேஸ்வரர் கோவில் நேற்று திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
குன்னுார் அருகே முடியக்கி என அழைக்கப்படும், ஆழ்வார்பேட்டையில் படுகர் இன மக்களின் பூர்வீக கோவிலான மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள, மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் திங்கள் அன்று மட்டும் நடை திறந்து, அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கி, 1:30 மணிக்கு நிறைவு பெற்றது. முன்னதாக, அதிகாலை, 5:00 மணிக்கு பக்தர்கள் நடைபயணமாக நடந்து வந்தனர்.
பக்தர்கள் கூறுகையில்,'கோடமலை கிராமத்தில் முதல் கன்று ஈன்ற மாட்டின் பாலை பச்சை மூங்கிலில் சேகரித்து அதை கொண்டு மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த மாட்டின் பாலில் தயாரித்த நெய் மட்டுமே கோவில் விளக்குக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வைக்கப்படும் விளக்கு அணையும் வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோவிலில் மகளிர் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த திருவிழாவை தொடர்ந்து மற்ற கிராமங்களில் தெவ்வப்பா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்,' என்றனர்.