/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடுக்கு விரைந்த நீலகிரி மருத்துவ குழு
/
வயநாடுக்கு விரைந்த நீலகிரி மருத்துவ குழு
ADDED : ஜூலை 31, 2024 01:50 AM
ஊட்டி;கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காக, ஊட்டியில் இருந்து மருத்துவர்கள் அடங்கிய இரு குழுக்கள் விரைந்தன.
அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், ஏராளமான குடியிருப்புகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊட்டியில் இருந்து இரு மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.
மருத்துவர் அருள் தலைமையில் ஒரு குழுவும், ரஞ்சித் தலைமையில் மற்றொரு குழுவும் விரைந்துள்ளது. இந்த குழுவில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.