/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை பத்திரமாக கரை ஏறியதால் நிம்மதி
/
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை பத்திரமாக கரை ஏறியதால் நிம்மதி
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை பத்திரமாக கரை ஏறியதால் நிம்மதி
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை பத்திரமாக கரை ஏறியதால் நிம்மதி
ADDED : ஜூலை 30, 2024 12:46 AM

பந்தலுார்;கேரள மாநிலம் கருளாயி பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை பத்திரமாக கரையேறியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்ட எல்லையான, பந்தலுார் மற்றும் நாடுகாணி சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், இதனை ஒட்டிய கேரள மாநிலம் வழிக்கடவு மற்றும் நிலம்பூர் பகுதி நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அதில், நிலம்பூர் செல்லும் சாலையில் வழிக்கடவு அருகே கருளாயி என்ற இடத்தில், பாயும் சாலியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் வரத்து காணப்பட்டது.
ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, ஆற்று வெள்ளத்தில் சிக்கி தடுமாறியது. தனியாக சிக்கி கொண்ட யானை எப்படியாவது கரையேற, நீண்ட நேரம் போராடி வெள்ளத்தில் நீந்தி கரைக்கு சென்றது. அப்போது யானையின் தவிப்பை சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததுடன், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
கரையேறிய யானை சிறிது நேரம் நின்றது. பின்னர் கரையேறிய மகிழ்ச்சியில் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.