/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் குழாய் உடைப்பால் தேங்கும் நீர்
/
குடிநீர் குழாய் உடைப்பால் தேங்கும் நீர்
ADDED : ஜூன் 08, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் ஐ.டி.ஐ., சாலையில் தோட்டக்கலை துறை கேட் அருகே தண்ணீர்தேங்கி சாலை சேதமடைந்து வருகிறது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட ஐ.டி.ஐ., சாலையில் தோட்டக்கலை துறைக்கு கேட் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் அருகிலேயே குடிநீர் குழாயும் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இவ்வழியாக தோட்டக்கலை பணியாளர்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைந்துள்ளது. குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சேறுகலந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் ஆய்வு செய்து, குடிநீர் உடைப்பை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.