/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் ஓடக்கம்வயல் கிராமத்துக்கு சாலை இல்லை தடுமாறி செல்லும் பழங்குடிகள்
/
பந்தலுார் ஓடக்கம்வயல் கிராமத்துக்கு சாலை இல்லை தடுமாறி செல்லும் பழங்குடிகள்
பந்தலுார் ஓடக்கம்வயல் கிராமத்துக்கு சாலை இல்லை தடுமாறி செல்லும் பழங்குடிகள்
பந்தலுார் ஓடக்கம்வயல் கிராமத்துக்கு சாலை இல்லை தடுமாறி செல்லும் பழங்குடிகள்
ADDED : ஜூன் 10, 2024 12:44 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே ஒற்றையடி நடைபாதையில் தடுமாறும் பயணம். பல தலைமுறைகளாக பழங்குடியினர் சிரமம்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பகுதியில் ஓடக்கம்வயல் அமைந்து உள்ளது. இதன் அருகே அம்மன்காவு, பந்தபிலா, எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் பல தலைமுறைகளாக பழங்குடியின மக்கள் மற்றும் வயநடன் செட்டி சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதுடன், தற்போது பிற சமுதாய மக்களும் அதிக அளவில் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
சாலை வசதி இல்லை
அதில், பந்தபிலா- அம்மன்காவு சாலையில் இருந்து ஓடக்கம்வயல் மற்றும் எருமைக்குளம் பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரு பகுதி துாரம் மண் சாலையும், மீதமுள்ள பகுதி ஒற்றையடி நடைபாதையாகவும் அமைந்துள்ளது.
மன்சாலையை தார் சாலையாக மாற்றி தரவும், ஒற்றையடி நடைபாதையை சாலையாக மாற்றம் செய்து தரவும் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
யானைகள் வந்து செல்லும் இந்தப் பகுதியில், விவசாய விளைபொருட்களையும், தங்களுக்கு தேவையான பொருட்களையும் தலைசுமையாக, 1 கி.மீ., துாரம் துாக்கி செல்ல வேண்டிய அவலம் உள்ளது. சில நேரங்களில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசர தேவைகளுக்கு செல்ல முடியாமல் உயிரிழக்கும் அவலமும் நடந்துள்ளது.
கண்டு கொள்ளாத ஊராட்சி
பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் அமைத்து தரும் ஊராட்சி நிர்வாகமும், இந்தப் பகுதியை கண்டு கொள்ள மறுப்பதால், யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் இப்பகுதி பழங்குடியின மக்கள் திண்டாடி வருகின்றனர்.
கோடைகாலங்களில் தட்டு தடுமாறி நடந்து செல்லும் நிலையில் மழை காலங்களில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களும், விவசாய தொழிலாளர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, இப்பகுதியை ஆய்வு செய்து சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.