/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்குவரத்து விதிமீறல் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
/
போக்குவரத்து விதிமீறல் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
போக்குவரத்து விதிமீறல் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
போக்குவரத்து விதிமீறல் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 29, 2024 02:45 AM

கோத்தகிரி;கோத்தகிரியில் போக்குவரத்து விதிமீறல் குறித்து, டிரைவர்களுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போக்குவரத்து எஸ்.ஐ., சிவக்குமார் பேசுகையில், ''வாகனங்கள் இயக்கும் போது, மொபைல் போன் பயன்படுத்துவது, சாலை வளைவுகளில் முந்துவது, குடிபோதையில் வாகனங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும். இருச்சக்கர வாகனங்கள் இயக்கும் போது, கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். கார்களில் 'சீட்பெல்ட்' அணிவதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், தற்போது காற்று வீசுவதால், காற்றின் வேகத்திற்கு ஏற்ப, இருச்சக்கர வாகனங்களை இயக்கி விபத்தை தடுக்கவேண்டும்,'' என்றார். டிரைவர்கள் பலர் பங்கேற்றனர்.