/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலக்காடு அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் திருட்டு இருவர் கைது; விசாரணை
/
பாலக்காடு அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் திருட்டு இருவர் கைது; விசாரணை
பாலக்காடு அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் திருட்டு இருவர் கைது; விசாரணை
பாலக்காடு அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் திருட்டு இருவர் கைது; விசாரணை
ADDED : ஜூன் 08, 2024 12:33 AM

பாலக்காடு;பாலக்காடு அருகே, பூட்டியிருந்த வீட்டில், 17 பவுன் நகையை திருடிய இருவரை கைது செய்த போலீசாரின் விசாரணையில், திருடிய நகையை கோவையில் விற்றது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மாத்துாரை சேர்ந்த சகாதேவன்- - ஜலஜா தம்பதியர் கடந்த மார்ச் 20ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர். பூட்டிய வீட்டை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த திருடர்கள், படுக்கை அறை அலமாரியில் வைத்திருந்த, 17 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
வீடு திரும்பிய சகாதேவனும் குடும்பத்தினரும், வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், நகை திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி, குழல்மன்னம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பயாசின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருட்டு தொடர்பாக, தமிழகத்தில் திருப்பூர் போலீசார் இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலக்காடு கண்ணம்பிரா பகுதியை சேர்ந்த சுலைமான், 55, கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சேர்ந்த முகமது நிசார், 32, ஆகியோர் என்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளான இவர்கள், மாத்தூரில் சகாதேவன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த குழல்மன்னம் போலீசார், அவர்கள் இருவரையும் 'கஸ்ட்டி' எடுத்து விசாரணை நடத்தினர். அதில், தமிழகத்தில் கோவையில் உள்ள நகைக்கடையில் திருடிய நகைகளை விற்றது தெரியவந்துள்ளது.
அதன்பின், அவர்களை திருப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.