/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வழியெங்கும் ரத்ததான விழிப்புணர்வு: சேலம் வரை இளைஞர்கள் பயணம்
/
வழியெங்கும் ரத்ததான விழிப்புணர்வு: சேலம் வரை இளைஞர்கள் பயணம்
வழியெங்கும் ரத்ததான விழிப்புணர்வு: சேலம் வரை இளைஞர்கள் பயணம்
வழியெங்கும் ரத்ததான விழிப்புணர்வு: சேலம் வரை இளைஞர்கள் பயணம்
ADDED : ஜூலை 14, 2024 03:07 PM

பந்தலுார்: மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பயணத்தை பந்தலுார் இளைஞர்கள் மேற்கொண்டனர்.
பந்தலுார் அருகே நெலக்கோட்டை பகுதியில் செயல்படும், 'பாரதி தலைமுறைகள்' அறக்கட்டளையின் நிர்வாகி மணிகண்டன் தலைமையிலான குழுவினர், பல்வேறு பகுதிகளிலும் ரத்த தானம் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் நதீம் ஆகியோர், மாநில அளவில் ரத்த தான தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தவும்; வழியெங்கும் மக்கள் மத்தியில் ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பைக் பயணத்தை துவக்கினர்.
நெலக்கோட்டை முதல் சேலம் வரையிலான பைக் பயணத்தை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர் ஞானசேகரன், பால் சொசைட்டி முன்னாள் தலைவர் உஸ்மான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.