/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
150 ஆண்டு பழமையான பிரீக்ஸ் பள்ளி: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
150 ஆண்டு பழமையான பிரீக்ஸ் பள்ளி: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
150 ஆண்டு பழமையான பிரீக்ஸ் பள்ளி: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
150 ஆண்டு பழமையான பிரீக்ஸ் பள்ளி: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 20, 2025 01:48 AM

ஊட்டி:ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 150 ஆண்டுகள் பழமையான பிரீக்ஸ் பள்ளி ஆசிரியர்கள் கடும் குளிரில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஆங்கிலேயர் காலம் முதல், 150 ஆண்டுகளாக பிரீக்ஸ் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கவுரவ தலைவராக நீலகிரி மாவட்ட கலெக்டர் இருந்து வருகிறார். இப்பள்ளி நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக, 'ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பு, சாதாரண விடுப்பு உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படவில்லை,' என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி வகுப்பறையில் மாலை, 6:00 முதல் கடும் குளிரில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில ஆசிரியர்கள் கூறுகையில், 'ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக, 50க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகிறோம். கடந்த ஏழு ஆண்டுகளாக எங்களுக்கு ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக, பள்ளி வேலை நேரம் முடித்த பின்பு, கடும் குளிரில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் இந்த போராட்டம் தொடரும்,'என்றனர். இந்நிலையில், இரவு, 8:30 மணிக்கு ஆர்.டி.ஓ., சதீஷ் தலைமையில் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.