/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 80 சதவீதம் பஸ்கள் இயங்கின; 75 தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
/
நீலகிரியில் 80 சதவீதம் பஸ்கள் இயங்கின; 75 தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
நீலகிரியில் 80 சதவீதம் பஸ்கள் இயங்கின; 75 தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
நீலகிரியில் 80 சதவீதம் பஸ்கள் இயங்கின; 75 தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் நியமனம்
ADDED : ஜன 09, 2024 10:17 PM

ஊட்டி:நீலகிரியில், 80 சதவீத பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது.
'அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,' உள்ளிட்ட, 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரியில், போராட்டத்தை முன்னெடுத்துள்ள சி.ஐ.டி.யு.,-எச்.எம்.எஸ்.,-ஏ.ஐ.டி.யு.சி., ஏ.டி.பி., உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில், எல்.பி.எப்., மற்றும் அதன் ஆதரவு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், நீலகிரியில், 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. ஊரக பகுதிகளில் ஒரு சில பஸ்கள்குறித்த நேரத்திற்கு வராததால், காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகி கணேசன் கூறுகையில்,''எங்களது கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்காலிக டிரைவர்களை பணிக்கு எடுத்து பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
பொது மேலாளர் நடராஜ் கூறுகையில், ''நீலகிரியை பொறுத்தவரை, 80 சதவீதம் பஸ்கள் இயங்கின. 40 டிரைவர்கள், 35 கண்டக்டர் தகுதியின் அடிப்படையில் தற்காலிகமாக பணிக்கு எடுத்து பஸ்களை இயக்கி வருகின்றனர்,'' என்றார்

