/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரக்கிளை விழுந்து வன ஊழியர் காயம்
/
மரக்கிளை விழுந்து வன ஊழியர் காயம்
ADDED : ஜன 09, 2024 08:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் அருகே கூலால் பகுதியை சேர்ந்தவர் லட்சிய தீபன், 35. இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகளுக்கு இன்று பிறந்தநாள் விழா கொண்டாட உள்ள நிலையில், நேற்று வீட்டின் அருகே காய்ந்த நிலையில் இருந்த சிறிய மரத்தை விறகிற்காக, வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
அப்போது, மரத்தின் கிளை முறிந்து இவர் நெஞ்சு மீது விழுந்துள்ளது. காயமடைந்த இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, கேரள மாநில தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். எருமாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

