/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாழடைந்த கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்டு வனத்தில் விடுவிப்பு
/
பாழடைந்த கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்டு வனத்தில் விடுவிப்பு
பாழடைந்த கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்டு வனத்தில் விடுவிப்பு
பாழடைந்த கிணற்றில் விழுந்த கடமான் உயிருடன் மீட்டு வனத்தில் விடுவிப்பு
ADDED : பிப் 29, 2024 11:57 PM

கூடலுார்;கூடலுார் அருகே, தனியார் காபி தோட்டத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த, கடமானை வனத்துறை; தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
கூடலுார் ஓவேலி, அண்ணா நகர் அருகே, யானை பள்ளம் பகுதியில், கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான காபி தோட்டம் உள்ளது. இங்கு பயன்படுத்தாத பாழடைந்த கிணற்றில், நேற்று அதிகாலை பெண் கடமான் தவறி விழுந்து, வெளியே வர முடியாமல் சப்தமிட்டுள்ளது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வனவர் சுபேத், வன ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று மானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில், சிரமம் ஏற்பட்டதால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், தீயணைப்பு வீரர்கள், அப்பகுதிக்கு சென்று, கிணற்றில் இறங்கி போராடி காலை, 11:00 மணிக்கு கடமனை மீட்டனர். மீட்கப்பட்ட கடமான் காபி வனப்பகுதிக்குள் சென்றது.
வனத்துறையினர் கூறுகையில், 'அப்பகுதியில், பயனற்று உள்ள, 10 அடி கிணற்றில் விழுந்த கடமான் வெளியே வர முடியாமல் சப்தமிட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கடமான் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டது. மேலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க, இப்பகுதியில் ஆய்வு செய்து, பயன்பாட்டில் உள்ள கிணறுகளை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கவும், பயனற்ற கிணறுகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

