
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஓட்டிய புதர் பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த பல ஆண்டுகளாக முகாமிட்டு வருகிறது.
நேற்று பகல், 11:00 மணிக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷன் வழியாக பஜாருக்குள் வந்தது. திடீரென சாலையில் யானையை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து கூச்சல் எழுப்பி யானையை காட்டிற்குள் துரத்தினர்.

