/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகளால் வாழை சேதம்: விவசாயிகளுக்கு நஷ்டம்: மக்கள் அச்சம்
/
காட்டு யானைகளால் வாழை சேதம்: விவசாயிகளுக்கு நஷ்டம்: மக்கள் அச்சம்
காட்டு யானைகளால் வாழை சேதம்: விவசாயிகளுக்கு நஷ்டம்: மக்கள் அச்சம்
காட்டு யானைகளால் வாழை சேதம்: விவசாயிகளுக்கு நஷ்டம்: மக்கள் அச்சம்
ADDED : பிப் 01, 2024 10:59 PM

கூடலுார்:கூடலுார் புளியம்பாறை அருகே, காட்டு யானை வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் புளியம்பாறை ஒட்டிய வனப்பகுதியில், பகல் நேரங்களில் முகாமிடும் காட்டு யானை, இரவில் குடியிருப்பு பகுதிகள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகிறது.
நேற்று முன்தினம், இரவு புளியம்பாறைந்த காட்டு யானை, பெரிய வீடு பகுதியில், 200க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்களை சேதப்படுத்தியது. அப்பகுதியினரும், தகவல் அறிந்து வந்த வன ஊழியர்களும் யானை விரட்டினர்.
மேலும், யானை, சாய்த்த பாக்கு மரம் மின்கம்பியில் விழுந்ததால் மின்கம்பம் சேதமடைந்தவுடன் அப்பகுதியில் மின்சப்ளையும் துண்டிக்கப்பட்டது.
சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'இரவு விவசாய தோட்டத்தில் நுழைந்த யானை, 200 நேந்திரன் வாழை மரங்களை சேதம் செய்துள்ளது. நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் வனத்துறையினர் உரிய நிவாரணம் வழங்குவதுடன், காட்டு யானை குடியிருப்புக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்,' என்றனர்.