/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பா.ஜ., ஓ.பி.சி., அணி உள்ளரங்கு மாநாடு
/
பா.ஜ., ஓ.பி.சி., அணி உள்ளரங்கு மாநாடு
ADDED : பிப் 06, 2024 12:06 AM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நீலகிரி லோக்சபா பா.ஜ.,வின் ஓ.பி.சி., அணி உள்ளரங்கு மாநாடு நடந்தது.
பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவர் பாலு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கருமுத்து தியாகராஜன், மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் பிரியதர்ஷினி, கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஓ.பி.சி., அணியின் தலைவர் சாய் சுரேஷ் பேசினார். மாநாட்டில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அனைத்து பகுதி மக்களுக்கும் கொண்டு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பா.ஜ., ஓ.பி.சி., அணியின் மண்டல, மாவட்ட மற்றும் மகளிர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.