/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வங்கி தேர்வுக்கான பயிற்சி பட்டதாரிகளுக்கு அழைப்பு
/
வங்கி தேர்வுக்கான பயிற்சி பட்டதாரிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 21, 2025 06:27 AM
கூடலுார் : கூடலுாரில், 'ரெப்கோ' வங்கி மூலம், துவங்கப்படும் வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தில் சேர தாயகம் திரும்பிய பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கூடலுார் வங்கியின் பேரவை பிரதிநிதி கலைச்செல்வன் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில், தாயகம் திரும்பிய பிள்ளைகளின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில், ரெப்கோ வங்கி அறக்கட்டளை சார்பாக, பல்வேறு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போது, மாவட்டத்தில் உள்ள தாயகம் திரும்பியவர்களின் பட்டதாரி பிள்ளைகள், தேசிய வங்கியில் பணியில் சேரும் வகையில், வங்கி தேர்வுக்கான பயிற்சி மையம் கூடலுாரில் துவங்கும் அறிவிப்பை வங்கியின் தலைவர் சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தலைவர் தங்கரசு வெளியிட்டுள்ளனர்.
இப்பயிற்சியில் சேர விரும்பும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாயகம் திரும்பிய பட்டதாரிகள், ரெப்கோ வங்கியின் இயக்குனர் கிருஷ்ணகுமார், -94420 81021 மற்றும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.