ADDED : பிப் 29, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுார் ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி ஊழியர் கோட்டைசாமி தலைமை வகித்தார்.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கண்ணன், குலாபிராஜா ஆகியோர், 'பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள்; அதனை எவ்வாறு கையாள வேண்டும்; அவர்களை எவ்வாறு பாதுகாப்பாக வழி நடத்த வேண்டும்,' என்பது குறித்து விளக்கி பேசினர்.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சமூக பணியாளர் தவமணி, 'பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்,' குறித்து விளக்கினார். பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி ஊழியர் சந்தியா நன்றி கூறினார்.

