/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விழா போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்
/
பொங்கல் விழா போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்
பொங்கல் விழா போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்
பொங்கல் விழா போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற குழந்தைகள்
ADDED : ஜன 16, 2024 10:53 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே கொளப்பள்ளி 'டான்டீ' 10 லைன், ஊர் பொதுமக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். தமிழ் செல்வன் தலைமை வகித்தார். சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டதுடன், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் குட்டீஸ்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். மேலும் பெண்களுக்கான போட்டிகளில் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் கோபால், பாரதி, வினோத் கண்ணா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஹனீபா மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாலு, மனோ, சதீஷ், விஜயமோகன், கோகுல், மணி சந்துரு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

