/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படு ஜோராக நடக்குது 'சில்லிங்' மது விற்பனை; கடை திறப்பதற்கு காத்திருக்க வேண்டாம்
/
படு ஜோராக நடக்குது 'சில்லிங்' மது விற்பனை; கடை திறப்பதற்கு காத்திருக்க வேண்டாம்
படு ஜோராக நடக்குது 'சில்லிங்' மது விற்பனை; கடை திறப்பதற்கு காத்திருக்க வேண்டாம்
படு ஜோராக நடக்குது 'சில்லிங்' மது விற்பனை; கடை திறப்பதற்கு காத்திருக்க வேண்டாம்
ADDED : ஜூன் 15, 2025 09:41 PM

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மது கடைகள் திறப்பதற்கு முன், ஆங்காங்கே, 'சில்லிங்' மது விற்பனை ஆங்காங்கே நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா பகுதிகளில், 75 டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. தினசரி, 1.50 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகிறது. சீசன் மற்றும் வார நாட்களில்,1.80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலை 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை விற்பனை நடக்கிறது.
மாவட்டத்தை பொறுத்த வரை அதிகாலை நேரங்களில் மழை காய்கறி தோட்டங்கள், லோடு உட்பட பிற பணிகளில் குளிரில் செல்லும் வட மாநில மற்றும் உள்ளூரில் சில தொழிலாளர்களை குறி வைத்து, அந்தந்த பகுதிகளில் சிலர் மது வகைகளை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
அதில், அதிகாலை 5:00 மணியிலிருந்து, இது போன்ற விதி மீறல் செயலில் ஈடுபடும் நபர்கள் மது வகைகளை பைகளில் வைத்து தொழிலாளர்களுடன் கலந்து, தேவைபட்டவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். சிலர் வாகனங்களில் அமர்ந்து குறிப்பிட்ட நபர்கள் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.
சில்லிங்கில் மது விற்பனையை உள்ளூர் போலீசார் கண்டும் காணாமல் விடுவதால், மாவட்டம் முழுவதும், பலர் பகலி லேயே போதையில் மிதக்கின்றனர். இதனால், குடும்பத்தகராறும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போலீசார் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டில் மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட ஆய்வுகளில், சோதனைச் சாவடிகளில் மது வகைகளை கடத்துவது; சில்லிங் மது விற்பனை தடுப்பது; கூடுதல் விலைக்கு மது விற் பனை செய்தது தொடர்பாக, 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, அதிகாலையில் மது விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும்,' என்றனர்.
-நிருபர் குழு-