/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரில் அனுமதியின்றி வைத்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற புகார்
/
நகரில் அனுமதியின்றி வைத்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற புகார்
நகரில் அனுமதியின்றி வைத்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற புகார்
நகரில் அனுமதியின்றி வைத்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற புகார்
ADDED : ஜன 26, 2024 12:38 AM

ஊட்டி:'ஊட்டி நகரில் இரவோடு இரவாக முளைக்கும் ஆக்கிரமிப்பு பெட்டி கடைகளை அகற்ற வேண்டும்,' என, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை பகுதிகளில் சமீபகாலமாக திடீரென பெட்டி கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவோடு, இரவாக ஊட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனை முன் பெட்டி கடை வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷனில் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். அதேபோல், சேரிங்கிராஸ் பஸ் ஸ்டாப்பை ஒட்டிய இடத்திலும் நடைபாதையை ஆக்கிரமித்து பெட்டி கடையை தயார்படுத்தி வாகனத்தில் கொண்டு வந்து இறக்கி சென்றனர். இது குறித்தும் மக்கள் புகார் கொடுத்து,'நகரில் ஆய்வு மேற்காண்டு இவற்றை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தினர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊட்டி நகர இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறுகையில், ''சேட் மகப்பேறு மருத்துவமனை முன் வைக்கப்பட்ட பெட்டி கடை குறித்து புகார் வந்தது. யார் வைத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,''நகரில் பெட்டி கடை வைக்க சமீபத்தில் யாருக்கு எந்த அனுமதி கொடுக்கவில்லை, ஆய்வு மேற்கொண்டு விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

